காதலர் தினம் தேவையா?,காதலர் தினம் கொண்டாடுவது கலாச்சார சீரழிவு,போன்ற சர்ச்சைகளுக்கு விடை காண்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல.இது காதல் பற்றிய எனது புரிதல்களின் பதிவு.
ஓட்டை விழுந்த ஓசோன் படலம் போல " காதல் " என்ற வார்த்தையும் மாசுபட்டுக் கிடக்குது.அது காதலின் குற்றம் அல்ல,காதலைபற்றிய நமது கற்பித்தலின் குற்றம்.காதலும், கடவுளும் ஏறக்குறைய சமமான தத்துவங்கள்,இரண்டின் உன்னதமும் புரிந்து கொள்பவரின் மனநிலை சார்ந்தவை.
இது தான் காதல் என்று காதலுக்கு ஒரு முழுமையான வரையறை கொடுக்க இயலாது,காதல் மனதின் கதகதப்பு,அது வார்த்தைதளின் வரையரைகளுக்குள் உட்படாது.
காதல் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது என்பது காதலுக்கான ஒரு விளக்கம்,என்னை பொறுத்த வரை விட்டுக்
கொடுப்பதில் இல்லை காதல்,நீ நீயாக இருப்பதால் உன்னை காதலிக்கிறேன் என்பதும்
நான் நானாக இருப்பதால் காதலிக்கப்படுகிறேன் என்பதுமே காதலின் உண்மையான சந்தோசமாக இருக்க முடியும்.
பிறந்தவர் எல்லாம் ஒரு நாள் இறந்து போக
வேண்டும் என்பது இயற்கையின் நியதி,இந்த இடைப்பட்ட காலத்தில் நம் இருத்தலுக்கான நியாயத்தை காதலால் அழகு செய்வோம்.களங்கப்பட்டு கிடக்கும் காதல் என்ற வார்த்தையை சுத்தப்படுத்துவோம்,நம்மை தெரிந்தோர்க்கு நம் மீதும்,காதல் மீதும் மரியாதையை ஏற்படுத்துவோம்.ஆதலினால் ...காதல் செய்வீர்!
பி.குறிப்பு
-----------
மணமானவர்கள் தங்களுது கணவன்/மனைவி யை மட்டும் காதல் செய்யவும் என்று company சார்பாக (வேறு வழி இல்லாமல்) கேட்டுக் கொள்கிறோம். :)
